WOMEN’S DAY

Standard
Womanpower_logo
மெல்லிய பூ என்று வாய் மொழி கூறும்,
அழகிற்கு இடமளித்து அடிமையுர செய்யும்,
தாய்மை நீ அடைகையில் உன்னை தலைமேல் வைத்தாடும் ,
சற்று நீ தவறினால் தலைகீழ் மாறும்,
காணோலி காட்சியில் நீ காணல் நீராகும்,
காண்பவர் கண்களுக்கு காட்சிப் பொருளாகும்,
மகள் என்று பிறக்கையில் பெருமிதம் கொண்டாலும்,
தாரம் என்றாகையில் உன்னை தாழ்தியே நடத்தும்,
சகோதரி என்று நீ ஆயினும் சமத்துவமின்றியே வாடனும்,
வேலைக்கு வெகுந்து நீ எழுகையில் வலிகள் பல ஆயிரம் சுமந்தே ஆகனும்,
பொட்டிட்டு பூச்சூடி நால் சுவருக்குள் அடைக்கும்,
சினம் கொண்டு நீ அதை சிதைக்கையில் உன் துயர் நீங்கும்!!

 

நிகழும் அந்நாள் மங்கையர் திருநாள்!!!!!

Advertisements

NON VEG VS HINDUISM

Standard

NON VEG VS HINDUISIMலகளவில் உண்ணும் உணவில் இரண்டு பிரிவுகளே உள்ளன. சைவம் அசைவம்! ஆனால் அவளம் இந்தியாவில் மட்டுமே மூன்று பிரிவுகள் சைவம், அசைவம், மேலும் மாட்டு இறைச்சி உண்ணுதல்!! மாட்டுக்கு புனித சாயம் பூசிய பெருமை இந்தியருக்கே சாரும்! புலால் உணவு தவறு என்றால் கோழி,ஆடு, மீன் உண்ணும் வழக்கமும் தவறானதே, ஆனால் கரிசனை எல்லாம் மாட்டுக்கு மட்டுமே! மற்றவைக்கு ” கொன்றால் பாவம் தின்றால் போச்சு”.

இந்து மதத்தில் உள்ள இந்துக்களுக்கு தான் சாதியின் அடிப்படையில் பேதம் என்றால் அவர் உண்ணும் உணவிலும் பேதம்!

பசிக்கு உண்பதே உணவு அன்றி நாளும் கிழமையும் பார்த்து உண்பது மடமை!!

மனிதன் ஓர் சமூக விலங்கு, தான் உண்ணும் உணவை அவன் தான் முடிவு செய்ய வேண்டும், அவன் கற்பனையில் உதித்த கடவுள் அல்ல!!!!!!!

50/50

Standard

EQUALITY

ந்தியாவில் என்று சுருக்க விருப்ப படவில்லை உலகளவில் பார்க்கையில் பூப்பிற்க்கு முன் மகப்பேறுக்கு பின் பெண்களுக்கு புணித பிம்பம்! ஆனால் தாரம் என்றாகையில் தலைகீழ் மாற்றம், ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கபடுகின்றனர். என்னவள் என்ற அடையாளமாய் நெற்றியில், கழுத்தில், காலில் சாதிக்கு தகுந்தவாறு மாற்றங்களுடன்!

ஆணின் வாழ்நாளில் கி.மூ கி.பி என்று கால வரைவே இல்லை, பெண்களுக்கு மட்டும் தான் தி.மு தி.பி என்ற அவளம். பெண்களுக்கு எதிரான ஆண்வேறி பாலியல் செயல்பாட்டிற்கு பெண் உடுத்தும் உடை மேல் தான் குற்றச்சாட்டே அன்றி ஆண்கள் மீது அன்று. பெண் உடுத்தும் உடை கூட ஆண் தான் முடிவு செய்கிறான். வேசி என்று வேதனை படுத்தியும், மலடி என்று மனம் உடைத்தும், கைம்பெண் என்று அறைக்குள் அடைத்தது நிந்தனை செய்கிறான். வேசி, மலடி, கைம்பெண் என்ற சொற்களை பெண்ணுக்கு மட்டுமே தமிழில் உருவாக்கினான். இலக்கியத்தில் மட்டுமே ஆண்டாள் காதல் மனம், ஆனால் சமகாலத்தில் இருக்கும் ஆண்டாள் காதல் செய்தால் கௌரவ கொலை தான் முடிவு. பெண்ணுக்கு எதிரான கொலைக்கு கௌரவ கொலை என்ற புணித பெயர் சூட்டினான்.

புராண ஆண்மீக கதைகளில் முப்பத்தி முவ்வாயிரம் பாத்திரங்களில் ஓர் பாத்திரம் தான் பெண்ணுக்கு சம உரிமை தந்ததாக உண்டு, ஏனேனில் இக்கதைகள் ஆண்கள் எழுதியவை. இதை கண்டு பாரதி பெண்கள் ரௌத்திரம் பழக வேண்டும் என்றான். மாற வேண்டிய பெண்கள் அல்ல ஆண்கள். பெண்களை பார்க்கும் கண்ணில் இல்லை வன்மம், கண்ணேட்டத்திலே உள்ளது வன்மம். பெண்பிள்ளை பெற்ற தாய்மார்கள் GOOD TOUCH,BAD TOUCH சொல்லி தருவதை விடுத்து, ஆண்பிள்ளை பெற்ற தாய்மார்கள் DON’T TOUCH சொல்லி தருவது நன்று.

ஆண் மணதில் எழும் மாற்றமே பெண்கள் வாழ்வில் வரும் வெளிச்சமே.